சுற்றுலா தளத்தில் போதுமான வசதி மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதியில் உள்ள சாந்தம் பாறை கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட கள்ளிப்பாறை என்ற பகுதியில்  மலைகள்  முழுவதும் நீல நிறத்தில் வண்ணமயமாக காட்சியளிக்கும் 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூத்துள்ளது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனைக் காண தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லுகின்றனர் ஆனால் அங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் மிக முக்கியமான தேவையான வாகன நிறுத்துமிடம் அவசர உதவிக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் மற்றும் இயற்கை உபாதைகளை கழிக்க  பொது கழிப்பிடங்களுமே.

இந்த தேவைகளை திருப்தி செய்யும் விதமாக சாந்தம் பாறை கிராம பஞ்சாயத்து அதிரடி நடவடிக்கை எடுத்து வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்திலேயே நிறுத்துவதற்கான இடத்தை ஏற்படுத்தி மற்றும் அரசு ஆம்புலன்ஸ் அங்கே நிறுத்தப்பட்டுள்ளது. 

உடனடியாக தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள E-Toilet முறையும் அங்கே கொண்டு வந்து இடம் குப்பைகளை சேகரிக்க பஞ்சாயத்து சார்பாக ஆட்களையும் நியமித்து இயற்கை அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன.  

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இதனால் வரும் சுற்றுலாப்  பயணிகளின் தேவையை பூர்த்தி செய்து சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கச் செய்துள்ளனர் என்பது பாராட்டுத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments