மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!
மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்றது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் 112 பரிந்துரைகள் செய்யப்பட்டு, அவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த பரிந்துரைகளில் பெரும்பாலானவை இந்தி மொழியை திணிக்கும் முயற்சியாகவே இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திராவிட கழகம்,உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
- சீனி, போத்தனூர்.
Comments