விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி மாணவர்கள் நடத்திய தேர்தல்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பள்ளியில் அரசியல் அறிவியல் ஆசிரியரின் உதவியோடு பள்ளி மாணவர்கள் மாணவர் பேரவை தேர்தலை சிறப்பாக நடத்தி அசத்தியுள்ளனர்.

தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தலை போலவே இங்கும் பள்ளி மாணவர்கள் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் தொடங்கி வாக்கு எண்ணிக்கை வரை சிறப்பாக செய்து முடித்துள்ளனர். மேலும் இதில் பள்ளி மாணவர்களே வாக்காளர்களாகவும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளாகவும் மாறி தேர்தல் பற்றிய முழுமையான அறிவைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நல்ல ஒரு திட்டம் பள்ளி மாணவர்களுக்கு அரசியல் ஆர்வத்தை ஏற்படுத்தியது. வருங்கால இந்தியா இளைஞர்கள் கையில் என்று நமது டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் சென்னது அது விரைவில் நிறைவேறும். தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தலை போலவே இங்கும் பள்ளி மாணவர்கள் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் தொடங்கி வாக்கு எண்ணிக்கை வரை சிறப்பாக செய்து முடித்துள்ளனர். 

மேலும் இதில் பள்ளி மாணவர்களே வாக்காளர்களாகவும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளாகவும் மாறி தேர்தல் பற்றிய முழுமையான அறிவைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் அமைந்துள்ள சாமி அய்யா நாடார் மேல்நிலைப்பள்ளி என்ற அரசு உதவி பெறும் பள்ளியில், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு அரசியல் அறிவியல் (POLITICAL SCIENCE) பாடப்பிரிவை பயிற்றுவிக்கும் ஆசிரியர் ரவிச்சந்திரன், தன்னிடம் பயிலும் மாணவர்களுக்கு அரசியல் பற்றிய அறிவினை ஏற்படுத்தும் வகையில் இப்பள்ளியில் மாணவர் பேரவை தேர்தலை நடத்தும்படி, பள்ளி மாணவர்களிடம் ஊக்குவித்துள்ளார்.

மாணவர்கள் நடத்திய இந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தினால் கடைபிடிக்கப்படும் முறைகளைப் பின்பற்றி வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் தொடங்கி, அவற்றின் மீதான பரிசீலனைகள் செய்து வேட்பாளர்களுக்கு சின்ன ஒதுக்கப்பட்டது. பின் இறுதி வேட்பாளர் பட்டியல், வேட்பாளர்களின் பிரச்சாரம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து இன்று பள்ளியில் "மாணவர் பேரவை தேர்தலுக்கான" வாக்குப்பதிவு நடைபெற்றது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனைத்தொடர்ந்து இன்று பள்ளியில் "மாணவர் பேரவை தேர்தலுக்கான" வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் இப்பள்ளியைச் சேர்ந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் 290 பேரில், 233 பேர் தங்களது வாக்கினை‌ பதிவு செய்தனர். 

தேர்தலில், மாணவர்களே வாக்குச்சீட்டு வழங்குவது, தேர்தல் நடத்தும் அலுவலர், வாக்கு சாவடி முகவர்கள், பறக்கும் படை அதிகாரிகள், வாக்குச்சாவடி அலுவலர்கள் என பல்வேறு பணிகளை மேற்கொண்டு தேர்தலை நடத்தினர். மேலும் மாணவர்கள் நடத்திய இந்த தேர்தலில் சிறிய அளவில் கூட மாற்றம் கூட இன்றி, வாக்காளர்களுக்கு கைவிரலில் மை வைப்பது போல் இங்கு மாணவர்களுக்கும் வாக்களித்ததற்கு அடையாளமாக மை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தேர்தல் நடக்கும்போது பறக்கும் படை அதிகாரிகளின் திடீர் ஆய்வு, மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க பயன்படுத்துவது போல சக்கர நாற்காலியில் மாணவர்கள் மாற்றுத்திறனாளியாக பாவித்து வந்து வாக்களித்தது உள்ளிட்டவை உள்ளாட்சி, சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத் தேர்தலை நம் கண் முன்னே காட்டியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru 

அந்த பள்ளி மாணவிகள் கூறுகையில்:

நாங்கள் தற்போது சட்டமன்றத் தேர்தல் பாராளுமன்ற தேர்தல் எவ்வாறு நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது என்றும், அடுத்த தேர்தலுக்கு இளம் வாக்காளர்கள் நாங்கள் தான். எங்களுக்கு இந்த மாதிரி தேர்தல் மூலம் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி தெளிவாக தெரிந்து கொண்டோம் என்றும் கூறினார். 

மற்றொரு மாணவர் மணிகண்டன் பேசியது: தனக்கு நோட்டா என்றால் என்னவென்றே தெரியாது என்றும் இந்த மாதிரி தேர்தல் மூலமாக அதை தெரிந்து கொண்டேன். அந்த பள்ளி மாணவி மாணவர்களுக்கும், அரசியல் அறிவியல் ஆசிரியர் ரவிச்சந்திரனுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments