தாழ்த்தப்பட்ட பெண்ணை தாக்கிய வழக்கில் டிஎஸ்பி உட்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை!! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
தாழ்த்தப்பட்ட பெண்ணை தாக்கிய வழக்கில் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை தூத்தக்குடி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம், காசிலிங்கபுரத்தை சார்ந்த தாழ்த்தப்பட்ட விதவை பெண் பாப்பா (47) என்பவரை கடந்த 2.11.2017 அன்று அப்போதைய புளியம்பட்டி காவல் ஆய்வாளர் விமல்காந்த், உதவி ஆய்வாளர் காந்திமதி ஆகிய இருவரும் அடித்து தாக்கி வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். இது சம்பந்தமாக தூத்துக்குடி பி.சி.ஆர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அதிசயகுமார் என்பவரால் தனிநபர் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதில், விமல்காந்த், மற்றும் காந்திமதி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.50ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். தண்டனை வழங்கப்பட்ட விமல்காந்த் டிஎஸ்பியாகவும், ஆய்வாளர் காந்திமதி தற்போது குமரி மாவட்டத்தில் பணி செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. பி.சி.ஆர் வழக்கில் காவல்துறை அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல் துறை அதிகாரிகளுக்கு பலமுறை அறிவுரை அவ்வப்போது உயர் அதிகாரிகள் மக்களிளை மரியாதை நடத்த வேண்டும் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் இது போன்ற நிகழ்வுகள் தமிழ் நாட்டில் நடைபெற்று வருகின்றது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.
Comments