தூத்துக்குடியில் பெட்ரோல் குண்டு வீச்சு பரபரப்பு!!

     -MMH 

தூத்துக்குடியில் பாஜக நிர்வாகிக்கு சொந்தமான பேருந்தை நோக்கி பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பேருந்து நகர்ந்ததால் பெட்ரோல் குண்டு சாலையில் விழுந்தது. இதனால் பயணிகள் உயிர் தப்பினர்.

கோவை ஈரோடு மற்றும் மதுரை இரண்டு நாட்கள் முன்னதாக பெட்ரோல் குண்டுகள் வீச்சு. 

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழகத்தின் பல பகுதிகளில் பாஜக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களின் இல்லங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி மாநில துணைத் தலைவராக உள்ளார். இவருக்கு சொந்தமாக ஏராளமான ஆம்னி பேருந்துகள் உள்ளன. இதில் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி வழியாக கோவைக்கு புறப்படுவதற்காக நேற்று இரவு 10 மணி அளவில் ஒரு பேருந்து தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே தயாராக நின்றது. 

அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், புதிய பேருந்து நிலையம் மேம்பாலத்தில் இருந்து பேருந்தின் மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் பேருந்து புறப்பட்டு சென்றதால் பெட்ரோல் குண்டு சாலையில் விழுந்து தீப்பற்றியது. பேருந்துக்கு எந்தவித சேதமும் ஏற்படாதால் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அதில் இருந்த 30 பயணிகளும் பத்திரமாக கோவை புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பேருந்தின் உரிமையாளர் விவேகம் ரமேஷ் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இதையடுத்து டவுன் டிஎஸ்பி சத்யராஜ், வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலீசார் சம்பவத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், சம்பவ இடத்தை நெல்லை சரக காவல் துணை தலைவர் பிரவேஸ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments