உலக இருதய தினத்தை முன்னிட்டு அரிமா சங்கம் எஸ் எம் எஸ் கலைக்கல்லூரி மாணவர்கள் இருதய நோய் விழிப்புணர்வு பேரணி!!
இன்று உலக இருதய தினம் இதனை ஒட்டி அரிமா சங்கம் எஸ் பி டி எ மற்றும் எஸ் என் எஸ் கலை கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் ராம் நகர் பகுதியில் இருந்து வ உ சி மைதானம் வரை விழிப்புணர்வு பேரணி கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் சுப்புராஜ் தற்போது இளவயதில் மாரடைப்பு இந்த காலகட்டத்தில் அதிகரித்து வருவது மிக வேதனை அளிப்பதாகவும் இளைய தலைமுறையை பெரும்பாலும் ஈர்த்து வரும் புகைப்பழக்கம் குடிப்பழக்கம் துரித உணவு முறை போன்றவற்றால் தங்களது வாழ்நாள் எண்ணிக்கையை குறைத்துக் கொள்கிறார்கள்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நமது பாரம்பரிய வாழ்க்கை முறையை கடைபிடிக்காமல் போனதன் விளைவு பல்வேறு நோய்களை உண்டாக்கி வருகிறது. இந்த விழிப்புணர்வு பேரணிகளால் நம் உடலை பற்றியும் நம் வாழ்க்கை முறை நோய்களைப் பற்றியும் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
அளவான உணவு சரியான நடைபயிற்சி நிம்மதியான உறக்கம் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
- சீனி, போத்தனூர்.
Comments