திருட்டு வண்டியில் உலா! உரிமையாளரிடமே சிக்கிய திருடன்!! கோவையில் ருசிகரம்!!!

   -MMH 

    கோவை பி.என்.புதூர் பொன்நகரை சேர்ந்தவர் மகேஸ்வரி(வயது 32) இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 4ஆம்  தேதி சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள ஒரு இறைச்சிகடையில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு இறைச்சி வாங்க சென்றுள்ளார். திரும்பவும் வந்து பார்த்தபொழுது அவர் நிறுத்தி இடத்தில் ஸ்கூட்டிய  காணவில்லை. உடனே பதற்றம் அடைந்த அவர்  பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளார். அப்பொழுது அங்குள்ள ஒருவர் ஒரு வாலிபர் ஸ்கூட்டியை ஓட்டி சென்றதாகாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைய அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

அடுத்த நாள் காலை காவல் நிலையம் செல்ல வீட்டிலிருந்து கிளம்பி பி.என். புதூர் மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது ஸ்கூட்டியில் வாலிபர் ஒருவர் செல்வதை பார்த்து உள்ளார். அந்த ஸ்கூட்டி இவருடைய ஸ்கூட்டி போன்று இருந்துள்ளது. அதை நன்கு உற்று நோக்கும் போது தான் தெரிந்தது அது அவருடைய வண்டி என்று உடனே கடும் அதிர்ச்சி அடைந்த அவர் "திருடன், திருடன்' என்று கூச்சல் போட்டு கத்தி உள்ளார். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. விசாரணையில் அந்த வாலிபர் சிரநாயக்கன் பாளையம் திலகர் வீதியை சேர்ந்த வேலு என்கிற வேலுச்சாமி (வயது 29)என்பது தெரிய வந்தது. காவல் துறையினர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஸ்கூட்டியை திருடிய வாலிபர் அதில் ஜாலியாக ஊர் சுற்றியதும் அந்த ஸ்கூட்டியின் உரிமையாளரிடமே திருடன்  சிக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

- சி.ராஜேந்திரன்.

Comments