வால்பாறையில் தாவரவியல் பூங்கா திறப்பு! ஒருபுறம் மக்கள் மகிழ்ச்சி மறுபுறம்...?

கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று காலை நகராட்சி சார்பில் 5.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தாவரவியல் பூங்கா பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்  பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பூங்காவை வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி திறந்து வைத்தார். இவ்விழாவில்  தாசில்தார் விஜயகுமார், நகராட்சி கமிஷனர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

தாவரவியல் பூங்கா திறப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அச்சம் அடைந்துள்ளனர் என்பது நிதர்சனமான உண்மை.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

பூங்கா பகுதிகளில் உள்ள புதர்களை நீண்ட நாட்களாக அப்புறப்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்தும் அப்புறப்படுத்தாமல் இருப்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் குறிப்பாக சிறுத்தை புலி நடமாட்டம் அப்பகுதியில்  இருப்பதால் பூங்காவிற்கு செல்லும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

மக்கள் நலனில் அக்கறை கொண்டு இப்பகுதியிலுள்ள  புதர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்என வால்பாறை மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். 

-M.சுரேஷ்குமார்.

Comments

Suresh R said…
உருப்படியான செய்தி..