ஆனைமலை தனியார் திருமண மண்டபத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்! பாராளுமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்!!

ஆனைமலை தனியார் திருமண மண்டபத்தில் திமுக சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமுக்கு கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் தலைமை தாங்கினார் இந்த வேலை வாய்ப்பு முகாமை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் 600க்கும் மேற்பட்ட இளைஞர் மற்றும் பெண்கள் கலந்து கொணடு  கொண்டனர்  நேற்று ஆனைமலை பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற முகாமில் 30க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் ஆனைமலை ஒன்றிய செயலாளர்கள் தேவசேனாதிபதி கன்னிமுத்து ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி, சாந்தலிங்ககுமார், தென்சங்கபாளையம் ஊராட்சி தலைவர் 

எஸ் ஆர் அண்ணாதுரை, ஆனைமலை பேரூராட்சி முன்னாள் தலைவர் சாந்தலிங்க குமார், ஆனைமலை நகரச் செயலாளர் ஏ பி செந்தில்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-அலாவுதீன், ஆனைமலை.

Comments