மாநில அளவில் நடைபெற்ற பளு தூக்குதல் போட்டியில் வால்பாறைக்கு பெருமை சேர்த்த இளைஞர்கள்!!

 -MMH 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் நேற்று  நடைபெற்ற பளு தூக்குதல் போட்டியில் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இருந்து MUSCLE MONSTER உடற்பயிற்சி நிலையம் மூலமாக மணிகண்டன் மாஸ்டர் தலைமையில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட அணைத்து மாணவர்களும் போட்டியில் வென்று பரிசு கோப்பையை  தட்டி வந்துள்ளார்கள் என்பது சிறப்பு. குறிப்பாக வால்பாறை அண்ணா நகரை சார்ந்த கவியரசன் மாநில அளவில் 3ஆம் பிடித்து அசத்தினார். அது போல ரொட்டிக்கடையக சேர்ந்த அருன் மாநில அளவில் 5ஆம் இடம் பிடித்தார். 

மேலும் போட்டியில்  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

-M.சுரேஷ்குமார்.

Comments