ஓம் சக்தி என்டர்டெயின்மெண்ட் சார்பாக கோவையில் தனியார் பொருட்காட்சி!!

     -MMH 

ஓம் சக்தி என்டர்டெயின்மெண்ட் சார்பாக கோவையில் 50 முதல் 60  நாட்கள் வரை, நடைபெறும் வகையில் தனியார் பொருட்காட்சி நடைபெற உள்ளது. கோவை வ உ சி பூங்கா மைதானத்தில் இன்று அதன் நிர்வாகிகள் தெரவித்துள்ளனர்.

கோவை வ உ சி பூங்கா பகுதியில், உள்ள மைதானத்தில் லன்டன் ப்ரிட்ஜ் போன்ற சாயலில் 50 முதல் 60 வரை நடைபெற உள்ள, பொருட்காட்சியை, ஓம் சக்தி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தினர் நடத்த உள்ளனர், இதற்கான பணிகள் தற்போது வ உ சி பூங்கா மைதானத்தில் நடைபெற்று வருகினற் நிலையில் இதன் ஒருங்கினைப்பாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், 

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பொழுது இந்நிறுவனத்தின் உரிமையாளர் மணி கூறும் பொழுது, கடந்த மூன்று வருடங்களாக, கொரோனா தொற்று காரணமாக தனியார் அமைப்பின் சார்பாக எந்த வித பொருட்காட்சி யும் நடத்த படவில்லை, இதனை கருத்தில் கொண்டு, தற்போது நிர்வாகிகளின் அதிக பட்ச உழைப்பில், கோவையிர் 50 முதல் 60 நாட்கள் வரை நடைபெற உள்ள இந்த பொருட்காட்சி யில், 40 க்கும் மேற்பட்ட  ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன, அனைவரும்  விளையாடி மகிழும் வகையில் 20 வகையிலான அம்யூஸ்மென்ட் வகைகள் உள்ளது, பொதுமக்கள் தங்களது கார்களை வசதியாக நிறுத்தம் செய்ய 300 கார் நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, 

மேலும் இந்த பொருட்காட்சி யில் பொதுமக்கள் நுழையும் பொழுது லன்டன் மாநகரின் வீதிகளை நினைவு கூறும் வகையில் இருக்கும், கோவையில் ஒரு லன்டனை கண்டது பொன்று வடிவமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார், மேலும்  தமிழகத்தின் முக்கிய பகுதியில் உள்ள, பல்வெறு கைவினை பொருட்கள், அரிதாக கிடைக்கும் பொருட்கள் இங்கு விற்பனைக்கு வர உள்ளது, பல்வேறு இடங்களில்  கான கிடைக்காத பொருட்கள் இங்கு கிடைக்கும், எனவும் குழந்தைகளை கவரும் வகையில், 

மெகா கலாடாட்டா எனும்  என்டர் டைமைன்ட் ஏற்பாடு செய்யபட்டுள்ளது என்றும், தற்பொழுது நவீன உலகில் அனைவரும் புகைப்படம் எடுத்து மகிழ ஆர்வமுடன் உள்ள நிலையில், 

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

செல்பி பாயின்ட் அமைக்க பட உள்ளது, என்றார் மேலும், வழக்கம் போல பொதுமக்கள், சாப்பிட பேல்பூரி, மசால் பூரி, காளான், டெல்லி அப்பளம், என 20க்கும் மேற்பட்ட  வகைகளில் உள்ளது, மேலும் நீலகிரி பகுதியில் இருந்து, சாக்லேட் கண்காட்சி மற்றும் விற்பனை நிலையம் உள்ளது , இந்த பொருட்காட்சி யானது, செப்டம்பர் 25 ஞாயிறு 

50 முதல் 60 நாட்கள் நடை பெற உள்ளது என்றார், மேலும், 400 அடியில் மிக பிரமாண்டமான முகப்பு தோரணம் அமைக்க பட உள்ளது என்றார், இந்த நிகழ்ச்சியில், இந்த போருட்காட்சியின் உரிமையாளர் மணி, இணை  ஒருங்கினைப்பாளர்கள் ராஜா, தினேஷ், கண்காணிப்பாளர் மனோகன், மேலாளர் ராஜேந்திரன், உதவி மேலாளர், ரபீக், என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- சீனி,போத்தனூர்.

Comments