காவல்துறைக்கும் முன் விடுதலைக்கும் என்ன தொடர்பு!!
மன்னிப்பு, தண்டனை நீக்கம், தண்டனைக் கழிவு, தண்டனைக் குறைப்பு என்பதெல்லாம் சட்டத்தில்இருப்பவைதான். ஒரு கைதியைப் பற்றி, அவர் குடும்பச் சூழல் பற்றி சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்திற்கே தெரியும்.
சட்டம்ஒழுங்கும், சிறைகளும் மாநிலஅதிகாரப் பட்டியலில் உள்ளன. இந்த அதிகாரங்களில் மாநிலஅரசுஇறைமை (sovereign) கொண்டது. அரசமைப்புச்சட்டம் 161-இன் கீழ் ஒரு கைதியை முன்விடுதலை செய்யும் முழுஅதிகாரமும் மாநிலஅரசுக்கு உண்டு.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இப்படித்தான் வி.ஆர். கிருஷ்ணய்யர் மத்திய அரசை எதிர்த்து சி.ஏ. பாலன் தூக்குத் தண்டனைக் குறைப்பில் நிலை எடுத்து வெற்றிபெற்றார். நமக்குஏன்வம்பு? என்ற மனநிலையில் யாரும் முடிவு எடுக்கத் தயங்குகிறார்கள் நீதிமன்றம் உட்பட.
நான் 15 ஆண்டுகள் சிறையில் இருந்து இருக்கிறேன். எனக்குத் தெரிந்து சாகும் நிலையில் உள்ள பல கைதிகளை சிறைக் கண்காணிப்பாளரே மாநில அரசுக்குத் தெரியப்படுத்தி விட்டு, அரசின் இசைவை எதிர்பார்த்து, விடுதலை செய்து இருக்கிறார். இறக்கும்போது ஒருவர் தன் வீட்டில் இறக்க வேண்டும் என்ற கருத்துப்படி (pleasure of dying at home) இதைச் செய்தார்கள்.
இப்போது அபு தாகீர் என்பவர் தீரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது இரண்டு கண்களும் பார்வை இழந்து விட்டன. அவரை விடுதலை செய்ய மாநில அரசு தயாராக இல்லை. நீதி மன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது. அமைச்சருக்கு, அரசுச் செயலாளர்களுக்கே தங்கள் அதிகாரம் என்னவென்று தெரியவில்லை. முன்விடுதலை பற்றிய கோரிக்கை வந்தால் அதைக் காவல்துறைக்கு அனுப்புகிறார்கள்..
காவல்துறைக்கும் முன்விடுதலைக்கும் என்னதொடர்பு? இதை யாரும் கேள்வி கேட்பதில்லை. இங்கு நடப்பது மக்களாட்சியா? காவல் துறை ஆட்சியா? அரசாங்கம் பத்தாண்டுகள் சிறையில் இருந்தவர்களை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் விடுதலை செய்வதுதான் மனிதத்தன்மையுள்ள செயலாக இருக்கும். அதுவே நாகரிக சமுதாயத்திற்கான பண்பாக இருக்கும்.
-அலாவுதீன், ஆனைமலை.
Comments