NCRB சமீபத்திய அறிக்கையின்படி 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் சாலை விபத்துகளால் 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு!!
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத்திய அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில், சாலை விபத்து வழக்குகள் 2020 இல் 3,54,796 இல் இருந்து 2021 இல் 4,03,116 ஆக அதிகரித்துள்ளது என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது. சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகள் 16.8 சதவீதம் அதிகரித்துள்ளது - 2020ல் 1,33,201ல் இருந்து 2021ல் 1,55,622 ஆக உயர்ந்துள்ளது. மிசோரம், பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசத்தில் அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. மிசோரமில், 64 சாலை விபத்துகளில் 64 பேர் உயிரிழந்தனர் மற்றும் 28 பேர் காயமடைந்தனர்; பஞ்சாபில், 6,097 சாலை விபத்துகளால் 4,516 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3,034 பேர் காயமடைந்தனர்; ஜார்க்கண்டில், 4,728 சாலை விபத்துகளால் 3,513 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3,227 பேர் காயம் அடைந்தனர். உத்தரப்பிரதேசத்தில் 33,711 சாலை விபத்துக்களால் 21,792 பேர் உயிரிழந்தனர் மற்றும் 19,813 பேர் காயமடைந்தனர். என்சிஆர்பியின் தரவுகள் நாட்டில் போக்குவரத்து விபத்துக்களால் (சாலை, இரயில்வே கடவை) இறப்புகளை வெளியிட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டில் நாட்டில் நடந்த 4.22 லட்சம் போக்குவரத்து விபத்துகளில் 1.73 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், உத்தரப் பிரதேசத்தில் 24,711 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதைத் தொடர்ந்து தமிழகம் 16,685 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஹரி சங்கர், கோவை வடக்கு.
Comments