பலத்த மழையிலும் சி.பி.ஐ இன் இடுக்கி மாவட்ட மாநாடு சிறப்பாக நடைபெற்றது!
கேரள மாநிலம் மூணார் அடுத்து உள்ள அடிமாலியில் சி.பி.ஐ இன் மாவட்ட மாநாடு நடத்தப்பட்டது. மிகவும் கோலாகலமாக மேள தாளத்துடன் மாநாடு சிறப்பாக தொடங்கியது.
இதில் பல நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.அதைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.பொதுக் கூட்டத்தில் விவசாயத்துறை அமைச்சர் வி. பிரசாத் அவர்கள் கலந்துகொண்டு பொதுக்கூட்டத்தை துவக்கிி வைத்தார்.
கூட்டத்தில் அவர் பேசும்பொழுது பாதுகாப்பு பகுதியில் உள்ள எந்த விவசாயிகளுக்கும் பிரச்சனை ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ளப்படும் என்று உரையாற்றினார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நெடுங் கனடத்திலிருந்து மாவட்ட கமிட்டி உறுப்பினர் வி.கே.தனபாலன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடத்த பட்டது மற்றும் அனைத்து பகுதியில் இருந்தும் ஊர்வலமாக வந்தவர்கள் அடிமாலியில் இணைந்தனர்.
மிகவும் சிறப்பான முறையில் மாநாடு நடத்தப்பட்டது.பலத்த மழை பெய்த போதும் மழையை பொருட்படுத்தாது தொண்டர்கள் வந்து மாநாட்டில் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.
Comments