மூணாறு பகுதிகளில் காட்டு யானை அட்டகாசம்! ரேஷன் கடையை உடைத்து பொருள்கள் நாசம்!!
மூணாறு பகுதிகளில் அதிகளவு யானைகள் உள்ளன.இவை அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தும் பொதுமக்களை பயமுறுத்தி வருகிறது.
இந்த சூழ்நிலையில் மூணாறு நைமக்காடு என்னும் பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடையை ஐந்தாவது முறையாக உடைத்து அங்கு பொதுமக்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த பொருட்களை எடுத்து சாப்பிட்டும் வெளியே வீசியும் நாசம் செய்தன.
கோதுமை மூட்டைகளை வெளியே எடுத்து வந்து சாப்பிட்டு விட்டு மீதியை திறந்தவெளியில் போட்டுவிட்டு சென்று உள்ளன. இதனால் ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அது மட்டும் இல்லாமல் மூணாறு உடுமலைப்பேட்டை நெடுஞ்சாலையில் யானைகள் அவ்வப்போது அணிவகுத்து நின்று போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.
Comments