கோவை, யுபிஎஸ், சோலார் மற்றும் ஸ்டெப்லைசர் சங்கத்தின், 9-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது..

 

-MMH

கோவை, யு.பிஎஸ்.சோலார் மற்றும் ஸ்டெப்லைசர் சங்கத்தின், 9-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், இன்று அவினாசி சாலை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில், உள்ள தனியார்  உணவகத்தில்  நடைபெற்றது,  இந்த கூட்டத்தில் 2022, மற்றும் 2023ம் ஆண்டுக்கான, புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டனர், 

அதில் தலைவராக பி.ஸ்டாலின், உதவி தலைவராக ஜி.முத்துக்குமார், செயலாளராக பாலசுப்பிரமணியன், இணை செயலாளராக பி.ஆர்.ஓ. தனசேகர பாண்டியன், பொருளாளராக சரவண செல்வன் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், மேலும் கூட்டத்தில் அறக்கட்டளையின் அறங்காவலராக ராஜகோபால், செயலாளராக காஜாமொய்தீன், ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் கூட்டத்தில் சிறப்பு அமைப்பாளர்களாக வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் பி.சுப்பிரமணியன், விஜய் டி.வி.புகழ் டாக்டர் ஏ.ராஜ்மோகன், ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள், கூட்டத்தில் சங்க முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் பொதுக்குழு கூட்ட நிகழ்ச்சிகளை சங்க இணை செயலாளர் பி.ஆர்.ஓ. தனசேகர பாண்டியன் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- சீனி,போத்தனூர்.

Comments