கோவை 80 வது வார்டு பகுதியில், குப்பைகளை எளிதாக தரம் பிரித்து சேகரிப்பதற்கான உபகரணங்கள்!!!
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 80 வது வார்டு கெம்பட்டி காலனியில் தூய்மை பணியாளர்களுக்கு குப்பைகளை தரம் பிரிப்பதற்கான உபகரணங்கள், வழங்கும் விழா நடைபெற்றது.
மாநகராட்சி சுகாதாரத்துறை தலைவர் மாரிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கலந்து கொண்டு,குப்பைகளை தரம் பிரிப்பதற்கான பக்கெட்டுகள்,தொட்டிகள் மற்றிம் குப்பைகளை சேகரிப்பதற்கான தள்ளு வண்டிகள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
தொடர்ந்து,அந்த பகுதியில் தேங்கியுள்ள வாகன கழிவுகளை அகற்றும் பணியை பார்வையிட்டார்.தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கும் தேசிய கொடியினை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில்,துணைமேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் சர்மிளா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- சீனி,போத்தனூர்.
Comments