மரக்கிளையில் 58 வயதுடைய நபர் தூக்கிட்டு தற்கொலை! போலீசார் விசாரணை!!
கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட கரியான் செட்டிபாளையம் அருகே உள்ள பாலாற்றில் சுமார் 58 வயதுடைய நபர் மரக்கிளையில் தூக்கிட்டு இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
எனவே அந்த ஊரைச் சார்ந்தவர்கள் அருகே உள்ள கோட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தகவலறிந்த கோட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் துணை ஆய்வாளர் சதீஷ்குமார் சம்பவ இடத்திற்கு
விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு தூக்கிட்டு இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆகஸ்ட் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இன்று ஆம்புலன்ஸ் மூலமாக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் இச்சம்பவத்தைப் பற்றி கோட்டூர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.
Comments