கருணை அடிப்படையில் 26 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கப்பட்டது!!
தூத்துக்குடி மாவட்டத்தில் கருணை அடிப்படையில் 26 பேருக்கு பணி நியமன ஆணையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வழங்கினார்!!
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் இருக்கும் போது மரணம் அடைந்த போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர் அலுவலர்களின் வாரிசுதாரர்கள் 26 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் இருக்கும் போது மரணமடைந்த போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அலுவலர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழக அரசுக்கு போலீஸ் துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டது. அதன் மூலம் போலீஸ் துறையில் பணியிலிருக்கும் போது உயிரிழந்த போலீசார், அமைச்சுப்பணியாளர் அவர்களின் வாரிசுதாரர்கள்க்கு 26 பேருக்கு தகவல் பதிவு உதவியாளர், வரவேற்பாளர் பதவிகளில் தமிழக அரசு பணி நியமனம் செய்து உள்ளது. நியமன ஆணை இந்தபணிக்கான பணி நியமன ஆணை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் துறை அலுவலக அமைச்சுப்பணி நிர்வாக அலுவலர் குமார், அலுவலக கண்காணிப்பாளர் செல்வக்குமார் மற்றும் உதவியாளர் கிருஷ்ணம்மாள் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.
Comments