ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய தகவல்! பொருட்கள் வாங்குவதில் சிக்கல்!! கார்டுகள் ரத்து!!!
போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பதில் அளித்துள்ளார்.
இந்தியாவில் மக்களின் நல்வாழ்வுக்காக புது புது திட்டங்கள் அரசால் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இதில் ஒரு பகுதியாக மிக குறைந்த விலையில் நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் மத்திய அரசு, தமிழக அரசு தரும் சலுகைகள் மக்களை சென்றடைகிறது. ஆனால் சில மக்களுக்கு எந்தவித சலுகையும் கிடைக்கவில்லை என்று சில புகார்கள் எழுந்தது.
இதனை தொடர்ந்து அண்மையில் உத்தரபிரதேசத்தில் தகுதியற்ற கார்டுகள் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் இல்லையென்றால் ரத்து செய்யப்படும் என்ற தகவல் பரவி வந்தது. அதற்கு அப்படி ஒரு விதி பிறப்பிக்கப்படவில்லை என்று உத்தரபிரதேசம் அரசு கூறியது. ஆனால் தற்போது இந்த விதி உத்தரபிரதேசத்தில் அமுலாக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் 1.42 கோடி தகுதியற்ற ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 21.03 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2021 ஆம் காலகட்டம் வரை நாடு முழுவதும் தகுதியற்ற ரேஷன் கார்டுகள் மொத்தம் 2 கோடியே 41 லட்சம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சிவக்குமார்.
Comments