சாமானிய மனிதனுக்கான நிதி பங்குதாரர் எனும் ஸ்ரேயா வெல்த் எனும் செயலி கோவையில் அறிமுகம்!!

   -MMH 

    கோவை: சாமானிய மனிதனுக்கான நிதி பங்குதாரர் எனும் ஸ்ரேயா வெல்த் எனும் செயலியை கோவையில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஸ்ரேயா வெல்த் எனும் செயலியை அந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் செயல் அதிகாரி வெங்கடேஷ்,தலைமை பயிற்சியாளர் தனேந்திரகுமார்,எச்ஆர் ஹெட் பாலாஜி, இணை நிறுவனர் கணேஷ் ஆகியோர் அறிமுகப்படுத்தி துவக்கி வைத்தனர்.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகத்தினர் நாட்டின் நுகர்வோர் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக சாமானிய மனிதனுக்கான நிதி பங்குதாரர் எனும் செயலியாக இருக்கும் என தெரிவித்த அவர்

நடுத்தர வர்க்க இந்திய குடும்பங்களின் நிதி தேவைகள் மற்றும் அவர்களின் அனைத்து நிதி இலக்குகளையும் நிறைவேற்றும் விதமாகவும் இச்செயலி அமையும் எனவும், நிதி சேவைகளை தனித்துவமாக வழங்குவதாகவும் மனித தொடுதலுடன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிதி அறிவு பெற்ற பாரதத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திக்காக

- சீனி,போத்தனூர்.

Comments