மலசர் பழங்குடியின மக்களுக்கு மத்திய அரசு விருது...!!!
மலசர் இவர்கள் இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலத்தின் ஆனைமலை பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள். இவர்கள் இயல்பாகவே அமைதியான மக்கள் சண்டை,சச்சரவுகள் ஈடுபடுவதில்லை. அதனால் என்னவோ இந்த மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் உலாந்தி வனச்சாரகத்தில் உள்ள கோழிக்க முத்தியில் வனத்துறையின் யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் 26 யானைகள் வளர்க்கப்பட்டு மற்றும் யானைகளுக்கு பயிற்சி அளித்து பராமரித்து வருகின்றனர். யானைகள் பராமரிப்பில் சிறந்து விளங்கும் கோழி கமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள 'மாவுத்கள்' மற்றும் 'காவடிகள்'ஆகியோரை கௌரவிக்கும் விதமாக 'கஜ் கவ்ரவ்' விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறந்த முறையில் யானையை பராமரித்து வரும் ஐந்து பேரை தேர்வு செய்து, வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானைகள் தினத்தன்று பெரியார் தேசிய பூங்காவில் வைத்து இந்த விருதை வழங்க உள்ளதாக மத்திய வனத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய மாநில அரசுகள் இப் பழங்குடி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று இப்பகுதி சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.
Comments