ரோஹித் ஷர்மா 2 உலக சாதனைகளை முறியடித்துள்ளார்!!

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் T20I போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்களில் 190/6 ரன்களை எடுத்தது. பின்னர் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 122/8 எடுத்து தோல்வி உற்றது.

மொத்தம் இந்திய கேப்டன் ரோகித் சர்மா இரண்டு உலக சாதனைகளை முறியடித்துள்ளார். டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் (3,443 ரன்கள்) என்ற சாதனையை படைத்தார். அவர் தனது 31வது அரை சதம் T20I பதிவு செய்து இதுவரை எந்த பேட்ஸ்மேன் செய்யாத சாதனையை செய்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஹரி சங்கர், கோவை வடக்கு.

Comments