சாலையில் வழி விடாததால் காது கேளா நபர் குத்தி கொலை!! 15 வயது சிறுமி வெறிச்செயல்!!
சத்தீஸ்கரில் முன்னே சென்ற வாகனம் ஹாரன் அடித்தும் வழி விடாததால் ஆத்திரத்தில் அந்த வாகனத்தில் சென்ற நபரை சிறுமி ஒருத்தி கழுத்தை அறுத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. சத்தீஸ்கரில் 15 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவர் சென்ற வழியில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு யாரும் முன்னே செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தத்தளித்து வந்தனர். இதனை தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்த நிலையில் சிறுமிக்கு முன்னே சென்ற இருசக்கர வாகனம் நகராமல் அங்கேயே நின்றுள்ளது. அந்த சிறுமி பலதடவை ஹாரன் அடித்தும் வழிவிடாமல் இருந்ததால் ஆத்திரத்தில் அந்த வாகன ஓட்டியை அந்த சிறுமி தாக்கியுள்ளார்.
அதாவது சிறுமியின் வாகனத்திற்கு முன்பு 40 வயதுடைய ஒரு நபரின் இரு சக்கர வாகனம் வழிவிடாமல் மறித்து நின்றதால் ஆத்திரம் அடைந்த அந்த 15 வயது சிறுமி தன் கையில் இருந்த கத்தியால் அவரின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனால் பலத்த காயம் அடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதில் பரிதாபம் என்னவென்றால் அந்த நபருக்கு காது கேட்காதது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து போலீஸ் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுமியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சிவக்குமார், சிந்தாரிப்பேட்டை.
Comments