கோவையில் "Safety Monday"..!! பிரச்சாரத்தை 5 கே கார் கேர் நிறுவனம் துவக்கியது!!

 -MMH 

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில்  Safety Monday எனும் நூதன பிரச்சாரத்தை 5 கே கார் கேர் நிறுவனம் துவக்கியது.

சமீப காலங்களாக சாலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பாக, சாலை பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கார்கள் பராமரிப்பில் தனி முத்திரை பதித்து வரும் 5 கே கார் கேர் நிறுவனம், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நூதன பிரச்சாரத்தை துவக்கியுள்ளனர்.

நிறுவனத்தின் தலைவர் கார்த்திக் குமார் சின்னராஜ் ஆலோசணைபடி, "Safety Monday" எனும் பெயரில் தமிழகம் முழுவதும் செயல் பட உள்ள இந்த பிரச்சாரத்தின் முதல் கட்ட துவக்க விழா கோவையில் நடைபெற்றது.கோவை அவினாசி சாலை லட்சுமி மில் சிக்னல் பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  நிறுவனத்தின் மேலாளர்கள் சுரேஷ் மற்றும் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் செந்தில் குமார் கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். இந்து தமிழ் நாளிதழுடன் இணைந்து நடைபெற்ற இதில், சீட் பெல்ட் அணிவது, ஹெல்மெட் அணிவது, போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடித்து இயக்கும் வாகன ஓட்டுனர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. 

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு திங்கள் கிழமையும் முக்கிய நகரங்களில் இது போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்ய உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

- சீனி,போத்தனூர்.

Comments