கோவையில் குரும்பா சமுதாய மக்களுக்கான நவீன சுயம்வர விழா நடைபெற்றது!!
பெருமிழலை அரசர் குறும்ப நாயனார் மண மாலை அறக்கட்டளை சார்பாக கோவையில் குரும்பா சமுதாய மக்களுக்கான நவீன சுயம்வர விழா நடைபெற்றது!!
தமிழகம் முழுவதும் வசித்து வரும் குரும்பா சமுதாய மக்களுக்கான திருமண பந்தத்தை ஏற்படுத்தும் விதமாக கோவையில் இரண்டாவது முறையாக பெருமிழலை அரசர் குறும்பநாயனார் மணமாலை அறக்கட்டளை சார்பாக நவீன சுயம்வர விழா கோவைபுதூர் சின்னசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னதாக அனைத்து மக்களின் நன்மைக்காக கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தமிழ்நாடு குரும்பா மக்கள் முன்னேற்ற சங்க மாநில,மாவட்ட நிர்வாகிகள் இணைந்து நடத்திய துவக்க விழாவில் பெருமிழலை அரசர் குறும்பநாயனார் மணமாலை அறக்கட்டளையின் மாநில தலைவர் சத்தியநாராயணன் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து இளைஞரணி தலைவர் ராஜ்குமார், செயலாளர் மயிலை செந்தில் குமார் ,பொருளாளர் செல்வராஜ்,துணை தலைவர் கணேசன்,புலவர் ரவீந்திரன்,அமர்நாத் சிவலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு குரும்பா மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.கிருஷ்ணசாமி என்ற ஆர்.கே.ஐயா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தமிழகம் முழுவதும் வசிக்கும் ஐம்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட குரும்பா சமுதாய மக்களின் குடும்பத்தின் திருமண பந்தத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த விழா நடைபெறுவதாகவும்,இதில் கலந்து கொண்டு அனைவரும் பயன்பெற வேண்டும் என கேட்டு கொண்டார்..துவக்க விழாவில், குரும்பா மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் அன்பழகன், கல்பனா வேலுசாமி, சிவக்குமார்,கிருஷ்ணசாமி மற்றும் குருவை இராமசாமி,அறக்கட்டளை நிர்வாகிகள் மணிவண்ணன்,ரேணுகா தேவி குணசேகரன்,பழனிச்சாமி,விஜயதேவி,இமயம் ஆண்டி, சந்திரசேகரன்,வைட் அண்ட் வைட் வேலுசாமி, ஒருங்கிணைப்பாளர் கேசவமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சீனி,போத்தனூர்.
Comments