இன்று ஐபிஎல் இறுதிப் போட்டி!!

    -MMH 

    15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 26-ந்தேதி தொடங்கியது.10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தகுதி பெற்றன.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள்  அஹமதாபாதில்   உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) மோதுகின்றன. 

இந்த இரு அணிகளும் லீக் போட்டிகளில் இருமுறை மோதிகொண்ட நிலையில் இரண்டு முறையும் குஜராத் அணிதான் வெற்றி பெற்றுள்ளது. எனவே இன்றைய போட்டியிலும் குஜராத் அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக  ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments