இரயில்வே மேம்பாலம் பழுது பார்க்கும் பணி நடைபெற உள்ளதால் பேருந்துகள்மாற்றி இயக்கம்!!
வேலூர் மாவட்டத்தில் காட்பாடி இரயில்வே மேம்பாலம் பழுது பார்க்கும் பணி நடைபெற இருப்பதால் வருகின்ற 01.06.2022 முதல் காட்பாடி மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் கீழ்கண்டவாறு மாற்றி இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பெ. குமாரவேல் பாண்டியன் இஆப அவர்கள் தெரிவித்துள்ளார்கள். காட்பாடியிலிருந்து பாகாயம் மார்கமாக செல்லும் அனைத்து நகரத்தட பேருந்துகளும் காட்பாடி இரயில் நிலையலித்திருந்து இயக்கப்படும்.
குடியாத்திலிருந்து இயக்கப்படும் அனைத்து நகரத்தட பேருந்துகள் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை வழியாக TEL வரை இயக்கப்படும்.
தடம் எண்.16B/A, 16/D, 16/T, பேருந்துகள் அனைத்தும் வேலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து விரிஞ்சிபுரம் வடுகந்தாங்கல் வழியாக இயக்கப்படும்.
தடம் எண். 16/E, 16F/A, 16F/B ஆகிய தடப்பேருந்துகள் பள்ளத்தூர், பரதராமிக்கு வள்ளிமலை கூட்டுரோட்டிலிருந்து இயக்கப்படும்.
16/M, 16R, தட பேருந்துகள் முறையே மகாதேவமலை, ரகுநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு காட்பாடி, வள்ளிமலை கூட்டுரோட்டிலிருந்து இயக்கப்படும். தடம் எண்.20/A, 20A/A, 20A/B, 20B/A, ஆகிய தடங்கள் VIT, E.B. கூட்டுரோடு, திருவள்ளுவர் பல்கலைகழகம் வரை வழியாக இயக்கப்படும்.
தடம் எண். 20R, 20M, பொன்னை புதூர் காட்பாடி தெங்கால் - காட்பாடி ஆகிய இரு தடப்பேருந்துகளும் வள்ளிமலை கூட்டு ரோட்டிலிருந்து இயக்கப்படும். தடம் எண்.14 பேருந்து சேர்காடு காட்பாடி, வள்ளிமலை கூட்டு ரோடு இடையே இயக்கப்படும்.
வேலூரில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பேருந்துகள் காட்பாடி சித்தூர், B.S, VIT, E.B., கூட்ரோடு, திருவள்ளுவர் பல்கலைகழகம், முத்தரசி குப்பம், சித்தூர் வழியாக இயக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
-P. இரமேஷ் வேலூர்.
Comments