கோவையில் தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் பயணி ஒருவரை தாக்கும் காட்சிகள்..!!
கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் அடுத்த பொங்கலூர் கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி என்பவர் தனியார் பேருந்து ஒன்றில் அன்னூரில் இருந்து புளியம்பட்டி நோக்கி சென்றுள்ளார்.
பயணச்சீட்டு வாங்கும்போது ரங்கசாமி இடம் சரியான சில்லறை இல்லாததால் பேருந்தின் நடத்துனருக்கும் ரங்கசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பேருந்தை நிறுத்திய ஓட்டுநரும், ரங்கசாமி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றவே ஓட்டுநரும், நடத்துனரும் சேர்ந்து ரங்கசாமியை தாக்கியுள்ளனர். இது குறித்த காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
ரங்கசாமியை தாக்கிய ஓட்டுநரும், நடத்துனரும் மீண்டும் ரங்கசாமியை பேருந்தில் ஏற்றுவதற்கு முயற்சி செய்கின்றனர். ஆனால் ரங்கசாமி பேருந்தில் ஏறாமல் அவர்களிடம் போராட்டம் நடத்துகிறார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்
I. அனஸ்.
Comments