பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் ஆட்டோ வாடகை அதிகமா..!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ ஸ்டாண்டில், குழப்பத்தை ஏற்படுத்தும் சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர் நலச்சங்கத்தினர், சப் - கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
இனம், மதம், ஜாதி, கட்சி வேறுபாடின்றி ஒற்றுமையாக உள்ளோம். இந்நிலையில், புதியதாக வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், சங்கத்தில் உள்ள உறுப்பினர்களை பிரிக்க முயற்சிக்கிறார்.அவர் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து, பல பிரச்னைகள் காரணமாக மகாலிங்கபுரம் போலீஸ் ஸ்டேஷன் வாயிலாக வெளியேற்றப்பட்டார். தற்போது இங்கு வந்தவர், முறையாக வாடகை எடுப்பதில்லை. வரும் வாடிக்கையாளரிடம் அதிகமான தொகை கேட்டு பிரச்னை செய்வதால், வாடிக்கையாளர்கள் வருவதில்லை. இதனால், தொழில் பாதிக்கப்படுகிறது.
எனவே, ஆட்டோ டிரைவர் மற்றும் அவருக்கு உடந்தையாக உள்ள இரண்டு டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை ஸ்டாண்டில் இருந்து நீக்கி, மற்றவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்
பொள்ளாச்சி.
Comments