வேலூரில் திருடுபோன 60 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்!
வேலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதத்தில் பொதுமக்கள் தவறவிட்ட சுமார் 9 லட்சம் மதிப்பிலான 60 செல்போன்களை போலீசார் மீட்டு அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று மாத காலத்தில் செல்போன் திருட்டு மற்றும் தவற விட்டதாக கூறி பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தன. அவற்றின்மீது மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவு போலீசார் செல்போன்களின் ஐஎம்ஏ என்னை வைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டார். அதில் மூன்று மாதத்தில் மாயமான 100 செல்போன்களில் 60 போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதன் மதிப்பு ரூ. 9 லட்சம் ஆகும். இதனை தொடர்ந்து நேற்று வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் எஸ்பி ராஜேஷ் கண்ணன் கலந்துகொண்டு செல்போன்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீ ராஜேஷ் கண்ணன் வழிப்பறி வீடு புகுந்து திருடும் நிலை மாறி தற்போது இணைய வழியில் பொதுமக்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் மோசடி செய்யப்படுவதாகவும் நாளுக்கு நாள் இதுபோன்ற மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். எனவே இணையவழி மோசடியால் பணத்தை இழந்தவர்கள் உடனடியாக போலீசில் புகார் அளித்தால் மோசடியில் ஈடுபட்ட அவரின் வங்கிக் கணக்கை முடக்கி பணத்தை மீட்க முடியும் என கூறினார்.
அவ்வாறு இல்லாவிட்டால் மோசடி நபர் அந்த பணத்தை வங்கியில் இருந்து எடுத்து விடுவார் என்றும் தெரிவித்தார் மேலும் இணையவழி மோசடியில் பணத்தை இழந்தவர்கள் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி சுந்தரமூர்த்தி டிஎஸ்பி பூபதி ராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
-P. இரமேஷ் வேலூர்.
Comments