ஆனைமலையில் ஸ்ரீமாகாளியம்மன் ஸ்ரீ வஞ்சியம்மன் கோவில் திருவிழா ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்..!!

   -MMH 

  கோவை மாவட்டம் ஆனைமலை வட்டம் இயற்கை எழில் சூழ்ந்துள்ள  ஆற்றங்கரைக்கு அருகாமையில் அம்பராம்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ வஞ்சியம்மன், அம்பல நாயக்கர், திருக்கோயில் திருவிழா கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான இப்பகுதியில் இந்த விழாவை கோயில் நிர்வாகத்தினர் மத நல்லிணக்க விழா என்று பதாகைகள் அமைத்து வைத்திருப்பது சிறப்பு மேலும் மத நல்லிணக்கத்தை வளர்க்கும் விதமாக இஸ்லாமிய உறவுகளின் சார்பாக பக்தர்களுக்கு குளிர்பானங்கள்  வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வைக் கண்ட அப்பகுதி மக்கள் இந்த மாதிரியான பாசம் கொண்ட உறவு முறைகள் என்றும் தொடர வேண்டும் பாராட்டுகின்றனர். 

நாளை வரலாறு செய்திகளுக்காக 

-அலாவுதீன் ஆனைமலை.

Comments