அரசு மானிய திட்டத்தில் மீன் வளர்க்க விண்ணப்பிக்கலாம்!!

 

-MMH

   கோவை நீர் வாழ் உயிரினம் வளர்ப்போர், தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழக அரசு சார்பில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.மீனவர்கள், மீன் வளர்ப்போர், சுய உதவி குழுவினர், கூட்டுப்பொறுப்பு குழுவினர், மீன் வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்பினர், தனி நபர் தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள் பயன் பெறலாம்.

மீன் வளர்ப்பு குளம் அமைத்து உள்ளீட்டு மானியத்துடன் மீன் வளர்ப்பு, நடுத்தர அலகு பயோ பிளாக் முறை மீன் வளர்ப்பு, சிறிய அலகு பயோ பிளாக் முறை மீன் வளர்ப்பு, நீர் மறு சுழற்சி முறையில் மீன் வளர்ப்பு, புறக்கடை அலங்கார மீன் வளர்ப்பு, ஒருங்கிணைந்த அலங்கார மீன் வளர்ப்பு திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளன.இதில் ஈடுபட விரும்புவோருக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி கிடைக்கும். விருப்பம் உள்ளவர்கள், கோவை டவுன்ஹால் சோமு காம்ப்ளக்ஸில் செயல்படும் மீன் வள ஆய்வாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு: 96555 06422. விண்ணப்பத்தை, http://www.fisheries.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என, கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments