கோவையில் கல்வி உதவி தொகை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது!!

   -MMH 

   கோவையில் நேரு நகர்,ராயல்ஸ்,சிறகுகள் உள்ளிட்ட அரிமா சங்கம் சார்பில் கல்வி உதவி தொகை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பன்னாட்டு அரிமா சங்கம் 324 சி அதிகாரப்பூர்வ ஆளுநர் வருகை நிகழ்ச்சி கோவை காளப்பட்டி, குரும்பபாளையம்  சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. 

கோவை நேரு நகர் அரிமா சங்கம்,ராயல்ஸ் அரிமா சங்கம்,காளப்பட்டி சிறகுகள் அரிமா சங்கம் ஆகியவை இணைந்து நடத்தபட்ட இந்த நிகழ்ச்சியில் நேரு நகர் அரிமா சங்க தலைவர் எஸ்செந்தில்குமார் வரவேற்புரை வழங்கினார்.

பன்னாட்டு சங்க மாவட்ட ஆளுநர் ஏ. நடராஜன் சிறப்புரையாற்றிதை தொடர்ந்து கல்வி உதவித்தொகை மற்றும்  பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

 மதுமிதா என்ற பெண்ணிற்கு ஐந்தரை ஆண்டுகள் படிப்பிற்கு முதல் தவணையாக ரூபாய் 10 ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. 

இதில் முதல் துணை ஆளுநர் ராம் குமார், இரண்டாம் துணை ஆளுநர் ஜெயசேகரன், கோவை நேரு நகர் அரிமா சங்க தலைவர் செந்தில்குமார், செயலாளர் முகம்மது, பொருளாளர் ஹரிஷ், கோவை ராயல் அரிமா சங்க தலைவர் சுரேஷ்குமார், செயலாளர்கள்  விஜயராகவன், சின்னதுரை,  பொருளாளர் கார்த்திக்,  காளப்பட்டி சிறகுகள்  அரிமா சங்க தலைவர் என். திவாகர், செயலாளர்கள்  குணசேகரன், மதன்குமார், பொருளாளர் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments