பள்ளிக்கூடத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால் மாணவர்களின் கவனம் சிதறுவதாக ஆசிரியர்கள் வேதனை!
கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள வடிவேலாம்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால், படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, வடிவேலாம்பாளையத்தில், ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 1 முதல் எட்டாம் வகுப்பு வரை, 169 மாணவ -மாணவியர் படித்து வருகின்றனர்.இப்பள்ளியில், 1 முதல் 5ம் வகுப்பு வரை ஒரு வளாகத்திலும், 6 முதல் எட்டாம் வகுப்பு வரை மற்றொரு வளாகத்திலும் செயல்பட்டு வருகிறது. இதில், 1 முதல் 5ம் வகுப்பு கட்டடம் உள்ள வளாகத்தை சுற்றியிருந்த பள்ளி சுற்றுச்சுவர் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், கடந்த, 2 மாதங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது. அதன்பின், மீண்டும் சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை.
பள்ளி சார்பில், சுற்றுச்சுவர் கட்ட வேண்டி, தொண்டாமுத்தூர் பி.டி.ஓ.,விற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.பள்ளியின் சுற்றுச்சுவர் இல்லாததால், சாலையோரத்தில் பள்ளி அமைந்துள்ளதாலும், பள்ளி வளாகத்தை பொது வழித்தடம் போல, நடந்து செல்வது, இருசக்கர வாகனங்களில் செல்வது என, பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மாணவர்களின் கவனம் சிதறுகிறது.
அதோடு, மதிய உணவு, பள்ளி கட்டட வராண்டாவில் மாணவர்கள் அமர்ந்து உண்பதால், அப்போது, காற்று வீசினால், உணவில் ரோட்டின் தூசி விழுகிறது. சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளியில் மது அருந்துவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிப்பது மட்டும் முக்கியமல்ல, கல்வி கற்பதற்கான நல்ல சூழ்நிலையும் உருவாக்கி தர வேண்டும் என்பதை உணர்ந்து, பள்ளிக்கு விரைவில் சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிப்பது மட்டும் முக்கியமல்ல, கல்வி கற்பதற்கான நல்ல சூழ்நிலையும் உருவாக்கி தர வேண்டும் என்பதை உணர்ந்து, பள்ளிக்கு விரைவில் சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பள்ளியின் சுற்றுச்சுவர் இல்லாததாலும், சாலையோரத்தில் பள்ளி அமைந்துள்ளதாலும், பள்ளி வளாகத்தை பொது வழித்தடம் போல, நடந்து செல்வது, இருசக்கர வாகனங்களில் செல்வது என, பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மாணவர்களின் கவனம் சிதறுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
Comments