கோவையில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி!!

   -MMH 

   கோவை மாநகர காவல்துறை, ஸ்பார்க்லிங் ஸ்டார்ஸ் மற்றும் மேக்னா ஜிவல்லர்ஸ் மற்றும் கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்களும் இணைந்து இரு சக்கர வாகனத்தில் தலைக் கவசம் அணியும் விழிப்புணர்வு பேரணி வடகோவை சிந்தாமணி சந்திப்பில் நடைபெற்றது.

கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் எஸ். ஆர்.செந்தில்குமார், ஸ்பார்க்லிங் ஸ்டார்ஸ் CEO விக்னேஷ் மற்றும் மேக்னா ஜிவல்லர்ஸ் துளசி கொடி அசைத்து தொடங்கி வைத்த பேரணி காமராஜர் ரோடு , திருவேங்கடசாமி ரோடு , R.S. புரம் , லாலி ரோடு உள்ளிட்ட வழியாக தடாகம் அரசு பொறியியல் கல்லூரியை சென்றடைந்தது.

200க்கும் மேற்பட்ட மகளிர்கள் மட்டும் கலந்து கொண்ட இதில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டும் என பொது மக்களுக்கும் , இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும்  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில் கோவை மாநகர காவல்துறையினர் பங்கு பெற்றனர்.

- சீனி,போத்தனூர்.

Comments