பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள பொள்ளாச்சி வீராங்கனை..!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குஞ்சிபாளையம் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட மணிகண்டன், கவிதா ஆகியோரின் மகள் மதுமிதா (வயது 17). தற்பொழுது இவர்கள் நாமக்கல்லில் வசித்து வருகின்றனர். உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பல நாடுகள் கலந்து கொண்டன அதில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட மதுமிதா அவர்கள் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இந்த பதக்கத்தினை வென்றதன் மூலம் இந்தியாவிற்கும் நமது தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் மேலும் இவரை மத்திய அரசு பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்துள்ளது.நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன், ஆனைமலை.
Comments