போக்குவரத்து சிக்னல்களில் குழந்தைகளுடன் பிச்சை எடுப்பது அதிகரிப்பு! நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!

 

-MMH

   தொழில் நகரான கோவைக்கு வேலை தேடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளில் வாகன போக்கு வரத்து அதிகமாக உள்ளது. அதை ஒழுங்குபடுத்த முக்கிய சாலைக ளில் சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஆனால் சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டுனர்களிடம் குழந்தையு டன் வந்து பிச்சை எடுப்பது அதிகரித்து உள்ளது. அதிலும் குறிப்பாக  லட்சுமி மில்ஸ், சாய்பாபா காலனி, புருக்பாண்ட் சாலை உள்ளிட்ட முக்கிய சிக்னல்களில் குழந்தையுடன் சிலர் பிச்சை எடுக்கின்றனர். 

அவர்கள் சாலையின் குறுக்கே போக்குவரத்துக்கு இடையூறாக ஒடி வந்து வாகன ஓட்டுனர்களிடம் பிச்சை எடுக்கின்றனர். சிக்னல் விழுந்த பிறகும் அவர்கள் விலகாமல் நின்று பிச்சை கேட்பதால் வாகன ஓட்டுனர்கள் அவதிப்படுகின்றனர். மேலும் விபத்து அபாயமும் ஏற்படுகிறது.  இது குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி குழந்தைகள் நல டாக்டர் பூமா கூறுகையில், வெயிலில் நீண்ட நேரம் இருப்பதால் குழந்தைக ளின் உடலில் நீர்இழப்பு ஏற்படும். ரோட்டில் அதிகபட்ச சத்தம் கார ணமாக கேட்கும் திறன் பாதிக்கும். மேலும் குழந்தைகளின் மனநிலையும் பாதிக்கும் என்றார்.

இது குறித்து மாவட்ட குழந்தைகள் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகை யில், ரோட்டில் சிக்னல்களில் குழந்தைகளுடன் நின்று பிச்சை எடுப்ப தை தடுக்க மாவட்ட நிர்வாகம், போலீஸ் மற்றும் தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் சார்பில் முயற்சி எடுக்கப்படுகிறது. குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்புகிறோம்.

அங்கு அவர்களிடம் உறுதிமொழி வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பிச்சை எடுப்பதற்காக குழந்தைகள் கடத்தப்படுகிறதா? என்பதையும் கண்காணித்து வருகிறோம் என்றார்.

கோவையில் முக்கிய சாலை சிக்னல்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கின்றனர். அதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments