தொமுச சார்பில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம், நீர்மோர் மற்றும் முட்டை வழங்கப்பட்டது!!

 

-MMH

     மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஈ.பி.அ.சரவணனின் ஏற்பாட்டில் 20-03-2022 காலை 10 மணி முதல் தொடர்ந்து திருப்பூா் மாநகரம் பி. என் ரோடு போயம்பாளையம் பகுதியில் 500 க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு நீர்மோர், கபசுர குடிநீர், முகக்கவசம், மற்றும் முட்டை, பப்பாளி பழம், தர்பூசணி, நீர்மோர் வழங்கப்பட்டது. போயம்பாளையம் பகுதியிலுள்ள மின்சார வாரிய அலுவலக அருகில் சிறப்பு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காக பல்வேறு இடங்களில் தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை திமுகழகம் சார்பில் திறக்கப்பட்டு வருகின்றது. அதன்படி தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் துயர் துடைத்து வரும் தமிழக முதல்வர் ஒப்பந்த தொழிலாளர்களின் ஒப்பற்ற தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்கவும் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் எம் எல் ஏ அவர்களின் வழிகாட்டிதலின் படியும் தொமுச பேரவை மாநில துணை செயலாளர் டி கே டி நாகராசன், திருப்பூா் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர்கள் சொல்படியும் இந்த நிகழ்ச்சியில் திமுகழக தலைவர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நீர்மோர் பந்தலை மாவட்ட தொமுச பேரவை கவுன்சில் துணை தலைவர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக பொது மக்களுக்கு பாண்டியன் நகர் பகுதி திமுகழக செயலாளர் வே.ஜோதி, 8 வட்ட திமுகழக செயலாளர் வெள்ளைசாமி, 7 வட்ட திமுகழக செயலாளர் தயானந்தம், 1 வட்ட திமுகழக செயலாளர் மகேந்திரன், உள்ளிட்டவர்கள் நீர்மோர், முககவசம் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

இதில் மின்சார வாரிய தொமுச செயலாளர் அ.சரவணன், பெருமாநல்லூர் மின்சார வாரிய தொமுச செந்தில் (எ) பழனிச்சாமி, தொமுச நிர்வாகிகள் பெருமாநல்லூர் மின்சார வாரிய தொமுச செந்தில் (எ) பழனிசாமி, ஈ.பி.ஜோதிபாசு, சேவியர், சிலவர் சரவணன், அமைப்புசார தொமுச பழனிச்சாமி, பாலமாதேஸ், முரசொலி வீரப்பன், சின்னதுரை, சக்திநகர் செல்வராஜ், கங்கா நகர் ரவி, சுதாகர், தனசேகர், பொன்னுசாமி, பால்ராஜ் மற்றும் தொமுச நிர்வாகிகளும் கழக நிர்வாகிகளும்.  மின்சார வாரிய தொழிலாளர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்படுகளை மின்சார வாரிய தொமுச செயலாளர் ஈ.பி. அ. சரவணன் செய்திருந்தார்.

-துல்கர்னி உடுமலை.

Comments