கோவை மாநகராட்சியில், நடப்பு நிதியாண்டில் நேற்று வரை, சொத்து வரியாக 198 கோடி ரூபாய் வசூல்!!
நிதியாண்டு முடிய, 6 நாட்களே இருப்பதால், வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில், 5.46 லட்சம் வரி விதிப்புதாரர்கள் இருக்கின்றனர். நிலுவை வரி ரூ.160.61 கோடி, நடப்பு நிதியாண்டு வரி ரூ.206.44 கோடி என, மொத்தம், ரூ.367.05 வசூலிக்க வேண்டும்.
இதில், நேற்று மாலை வரை, நிலுவை கணக்கில் ரூ.36.28 கோடி, நடப்பு நிதியாண்டு கணக்கில் ரூ.161.64 கோடி என, ரூ.197.92 கோடி வசூலாகியிருக்கிறது.நடப்பு நிதியாண்டு கணக்கில், இன்னும், 44.79 கோடி ரூபாயும், நிலுவை கணக்கில் 124.33 கோடி ரூபாயும் சேர்த்து, 169.13 கோடி ரூபாயும் வசூலிக்க வேண்டியிருக்கிறது. நிதியாண்டு முடிய ஆறு நாட்களே இருப்பதால், வரி வசூல் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.
வரியில்லாத வாடகை மற்றும் ஏலம் இனங்களை வசூலிக்க முனைப்பு காட்டப்படுகிறது.சொத்து வரியை குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டடங்கள், அரசாங்க கட்டடங்கள் மற்றும் கோர்ட்டில் வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பவை என, மூன்று பிரிவாக பிரித்திருக்கின்றனர். அரசாங்க கட்டடங்கள் வகையில் ரூ.18.54 கோடியும், நீதிமன்ற வழக்கு விசாரணையில் நிலுவையாக ரூ.55.56 கோடியும் நிலுவையில் இருக்கிறது. ரூ.49 கோடிக்கு பாக்கிமாநகராட்சி பகுதியில், மூன்று லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. குடிநீர் கட்டணமாக ரூ.89.12 கோடி வசூலிக்க வேண்டும். இதுநாள் வரை, ரூ.39.90 கோடியே வசூலாகியிருக்கிறது. இன்னும், ரூ.49.22 கோடி நிலுவையில் இருக்கிறது.
இதேபோல், 20 ஆயிரத்து, 754 பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ரூ.66.47 கோடி வசூலிக்க வேண்டும். இதில், ரூ.3.29 கோடியே வசூலாகியுள்ளது; ரூ.63.17 கோடி நிலுவையில் இருக்கிறது.வரியில்லாத வாடகை மற்றும் ஏல இனங்கள் வகையிலும் ரூ.51.51 கோடி வசூலிக்க வேண்டியிருக்கிறது.பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனத்தினர், நிதியாண்டு இறுதிக்குள் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை செலுத்தி விடுகின்றனர்.
ஆனால், வாடகை மற்றும் குத்தகை இனங்கள் வசூலிப்பது; பாதாள சாக்கடை இணைப்பு வழங்கி கட்டணம் பெறுவது; தொழில் வரி வசூலிப்பது போன்றவற்றில் மாநகராட்சி வருவாய் பிரிவினர், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.குடிநீர் இணைப்பு 'கட்'உதவி கமிஷனர் (வருவாய்) செந்தில்குமார் ரத்தினம்கூறுகையில், ''வரியினங்கள் செலுத்தாத இடங்களில்குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
ஐந்து மண்டலங்களிலும், 219 குடிநீர் இணைப்புகளும்,மத்திய மண்டலத்தில் ஒரு பாதாள சாக்கடை திட்ட(யு.ஜி.டி.,) இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள், நிலுவையில் உள்ள வரியினங்களை செலுத்தி, துண்டிப்புநடவடிக்கைகளை தவிர்க்கலாம்,'' என்றார்.
-சுரேந்தர்.
Comments