வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளரை சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்!!
கோவை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி 81 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மார்க்கெட் மனோகரன் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் ராம்கி என்ற ராமகிருஷ்ணனை சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.
மாநகராட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. கொங்கு மண்டலத்தில் திமுக பெற்றுள்ள இவ்வெற்றியால் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர். இதனை ஒட்டி கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் வார்டு மக்களை சந்தித்து வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக 81 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மார்க்கெட் மனோகரன் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் ராம்கி என்ற ராமகிருஷ்ணனை சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். அப்போது மார்கெட் முத்து,முருகன்,மூர்த்தி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் 81 வது வார்டு கவுன்சிலர் மார்க்கெட் மனோகரனுக்கு பூங்கொத்து கொடுத்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
- சீனி,போத்தனூர்.
Comments