காப்பாத்துங்க தமிழக முதல்வருக்கு உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் வேண்டுகோள்!

   -MMH 

   உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரம் அடைந்து  பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இந்நிலையில்    ரஷ்யா உக்ரைனின் தலைநகர் கிவைவை நெருங்கி உள்ளது அதேசமயம்  தலைநகருக்கு மேலே ரஷ்யா ஏவுகணைகளை வீசி தாக்கி வருகிறது

அதே போல் விமானம் மூலம் இன்று  அதிகாலையில் மீண்டும் குண்டு மழையை ரஷ்யா வீசி வருகிறது இதனால் உக்ரைன் விரைவில் ரஷ்யாவிடம் வீழ்ந்துவிடுமோ என்ற அச்சம் உலக மக்களிடம்  எழுந்துள்ளது.

இந்த பதற்றமான சூழ்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் அந்த வீடியோவில் தங்களை காப்பாற்றுங்கள்  காலையிலிருந்து  தாங்கள் இருக்கும் இடத்தில் குண்டுகள் வீசப்படுவது ஆகவும் இதனால் நாங்கள்  அச்சம் அடைந்துள்ளதாகவும்

மேலும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். உடனடியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு  இத்தகவலை எடுத்துச்சென்று தங்களை காப்பாற்றும்படி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-M.சுரேஷ்குமார்.

Comments