சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல்! தீர்வு வேண்டி பொதுமக்கள் கோரிக்கை!!

   -MMH 

   வால்பாறையில், சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் அவதிப்படுகின்றனர். வால்பாறையில், பொள்ளாச்சி ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, போஸ்ட் ஆபீஸ் முதல் புதிய பஸ் நிலையம் வரை, சாலையோரத்தின் இருபுறத்திலும், வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. சுற்றுலா வாகனங்கள் நிறுத்த 'பார்க்கிங்' வசதி இல்லாததால், சாலையோரம் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.இதனால், வால்பாறை நகரில் நாள் தோறும் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகவே உள்ளது.

பொதுமக்கள் கூறுகையில், "வால்பாறை நகரில், 'பார்க்கிங்' வசதி இல்லாததால், சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்துகின்றனர். இது தவிர, டூரிஸ்ட் வேன், கார், ஆம்னி, ஆட்டோக்களை அதிக அளவில் சாலையோரம் நிறுத்துகின்றனர்.போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாகனங்களை நிறுத்த, 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண முடியும்," என்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக ,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments