மார்ச் 12ல் லோக்அதாலத்!!

   -MMH 

  கோவை மாவட்டத்தில்,மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேங்கியுள்ள வழக்குகளில் சமரச தீர்வு காண்பதற்கு,கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலுார் ஆகிய நீதிமன்ற வளாகத்தில் வரும் 12ல், லோக்அதாலத் விசாரணை நடக்கிறது. 

மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு, காசோலை மோசடி, சிவில் வழக்கு, கிரிமினல் வழக்கு, தொழில் தகராறு வழக்குகள், வங்கி கடன் நிலுவை, நுகர்வோர் கோர்ட் வழக்குகள், குடும்ப வழக்குகள் உள்ளிட்ட நிலுவை வழக்குகளில் தீர்வு காணலாம். இதற்காக, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில், மார்ச் 1 முதல் 12 வரை சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் மூலம் வழக்கில் தீர்வு காண விரும்பும் வக்கீல்கள் மற்றும் வழக்காடிகள், இந்த சிறப்பு அமர்வில் பங்கேற்று பயன்பெறலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments