கிணத்தை காணோம்? வடிவேல் பாணியில் மதுரையில் காணமல்போன செல்போன் கோபுரம்..!!!
தங்களது நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட செல்போன் கோபுரம் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள கூடல்புதூர், அமராவதி தெருவில் பிரபல நிறுவனத்தின் சார்பில் செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்த செல்போன் கோபுரம் கடந்த 2 நாட்களாக காணவில்லை.
வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தொலைத்தொடர்பு சரியாக கிடைக்கவில்லை என்று தொடர்ந்து புகார் தெரிவித்த நிலையில், நிறுவனம் சார்பில் ஆய்வு செய்கையில் அங்கு அமைக்கப்பட்டு இருந்த செல்போன் கோபுரம் மாயமாகி இருந்துள்ளது.
இதனையடுத்து, அந்நிறுவன மேலாளர் முத்து வெங்கடகிருஷ்ணன் மாயமான செல்போன் கோபுரங்களை கண்டறிந்து தரக்கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்கையில், செல்போன் கோபுரம் திருடுபோனது உறுதியானது.செல்போன் கோபுரம் அமைத்து கொடுத்த ஒப்பந்ததாரர் மற்றும் நிலத்தின் உரிமையாளர்களுக்கு இடையே இருந்த தகராறு காரணமாக செல்போன் கோபுரம் அவர்களால் தன்னிச்சையாக அகற்றப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
-N.V.கண்ணபிரான்.
Comments