பொது முடக்கத்தால் வெறிச்சோடிய சிங்கம்புணரி! பொதுமக்கள் ஒத்துழைப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவலின் மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இரவு நேர பொதுமுடக்கம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து, பொதுமுடக்க நாளான இன்று சிங்கம்புணரி நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வாகனப்போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
காவல்துறையினர் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.- பாரூக், ராயல் ஹமீது.
Comments