கோவையில் நேற்று ஒரே நாளில் 585 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 3 பேருக்கு ஒமைக்ரான்!!
கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 585 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 55 ஆயிரத்து 334 ஆக அதிகரித்தது.
மேலும் நேற்று 174 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் 2 லட்சத்து 50 ஆயிரத்து 780 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கோவையில் நேற்று உயிர்பலி எதுவும் இல்லை.
தற்போது 2,030 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கோவை மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டது.
அவர்கள் 3 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள கொரோனா பாதிக்கப்பட்டோரின் பட்டியலில் கூறி உள்ளது. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் இதுவரை 4 பேர் வரை ஒமைக்ரான் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கொடிசியா சிகிச்சை மையத்தில் நேற்று இரவு 10 மணி நிலவரப்படி அங்கு 28 பேர் வரை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
Comments