கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு, வீட்டிலேயே சிகிச்சை! 5 மருத்துவ குழு நியமிக்கப்பட்டு உள்ளதாக தகவல்!!

   -MMH 

   கோவை மாநகராட்சி பகுதியில் தினசரி கொரோனா பாதிப்பு தற் போது 300-ஐ தாண்டி விட்டது. இதனால் தொற்று பரவல் வேகத்தை கட்டுப்படுத்த மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக நேற்று முதல் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதைத்தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் பகுதியில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு அவர்களின் வீடுகளிலேயே சிகிச்சை அளிக் கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார், உதவி நகர் நல அலுவலர் வசந்த் திவாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாவது;

"கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களை அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளது. 

மாநகராட்சியில் உள்ள 5 மண்டலத்துக்கும் தலா ஒரு மருத்துவ குழு நியமிக்கப்பட்டு  உள்ளது. இந்த குழுவில் ஒரு டாக்டர், ஒரு நர்சு ஆகியோர் இருப்பர். கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானவர்களின் வீட்டிற்கு மருத்துவ குழு நேரில் சென்று உடல்நிலையை ஆய்வு செய்வார்கள். இதில் இணை நோய், கூடுதல் பாதிப்பு உள்ளவர்களை மருத்துவ மனைக்கு அனுப்புவார்கள். தொற்று வீரியம் குறைந்த நோயாளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிப்பார்கள்.

இதன் மூலம் மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படாது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை பாதுகாப்பு கவச உடையுடன் மருத்துவ குழு சந்தித்து ஆலோசனை வழங்கும். அவர்கள், காய்ச்சல், ஆக்கிஜன் அளவை கண்டறிந்து தொடர் சிகிச்சை வழங்கு வார்கள். தேவைப்பட்டால் மருத்து, மாத்திரை வழங்கப்படும். 

மேலும் ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் மூலமும் இந்த பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது." இவ்வாறு அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக ,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments