குடிநீர் திட்ட பணிகளை, 2023ம் ஆண்டு ஆக., மாதத்துக்குள் முடிக்க உத்தரவு!!

   -MMH 

   குடிநீர் திட்ட பணிகளை, 2023ம் ஆண்டு ஆக., மாதத்துக்குள் முடிக்க, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவு!!

கோவை மாநகராட்சியில், 646.71 கோடி மதிப்பில் நடந்துவரும், 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகளையும், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 62.17 கோடி மதிப்பில் உக்கடம் பெரியகுளத்தில் நடக்கும் மேம்பாட்டு பணிகளையும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, தெற்கு மண்டலம், தெலுங்குபாளையம், ஜெயராம் நகர் பகுதியில், 1,240 வீடுகளுக்கு, 24 மணி நேர குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகிக்கும் பணிகளை பார்வையிட்டு, தற்போதைய நிலை குறித்து சிவ்தாஸ் மீனா அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது, அவர்,''குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை துரிதப்படுத்தி, வரும், 2023ம் ஆண்டு ஆக., மாதத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும். குடிநீர் திட்ட பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் செய்துமுடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்,'' என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments