நம்பி ஓட்டுப்போட்டவர்களை மறந்து விட்டாரா.. எம். எல். ஏ. , உயிர் போகும் நிலை! காப்பாற்றுங்கள் என கதறும் மக்கள்!!

   -MMH 

   டைடல் பார்க் பகுதியிலிருந்து, விளாங்குறிச்சி செல்லும் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக இருப்பதால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இரவு நேரங்களில் சாலையில் செல்லவே, வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். அதே பகுதியில் தான் சிங்கநல்லூர் அதிமுக சட்டமன்ற உறிப்பினராக கே. ஆர் ஜெயராம் உள்ளார். ஒரு நாளைக்கு பலமுறை அவ்வழியாக தான் சென்று வருகிறார். ஆனால் மக்களை பற்றி எவ்வித கவலையும் இல்லாமல் நம்பி ஓட்டுப்போட்டவர்களை, மறந்து விட்டாரா எம். எல். ஏ. , என, மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட, 37வது வார்டு பகுதியான டைடல் பார்க் டூ சேரன்மாநகர் வரை சுமார் 3 கி. மீ. , தொலைவு உள்ளது. இங்கு, ஜீவா நகர், குமுதம் நகர், சேரன்மாநகர், விளாங்குறிச்சி உள்ளிட்ட, பல பகுதிகள் உள்ளன. அவிநாசி ரோட்டிலிருந்து சத்தி ரோடு, கணபதி செல்வோர், டைடல் பார்க்கில் பணிபுரியும் நபர்கள் என, ஒரு நாளுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட நபர்கள் இச்சாலையில் பயணிக்கின்றனர். மூன்று கி. மீ. , சாலையில் சுமார், 10க்கும் மேற்பட்ட இடங்களில் குழிகள் இருப்பதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். அவசரத்துக்கு நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள், குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் திணறுகின்றன. அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதோடு, சில நேரங்களில் உயிரிழப்பும் நிகழ்கிறது.

கடந்த அதிமுக ஆட்சியில், கேபிள் பதிக்கும் பணிகள் நடந்தன. அதற்காக தோண்டிய இடங்கள், சரியாக மூடப்படாமல் இன்னும் பல இடங்களில் மண் ரோடாக காட்சியளிக்கின்றன.

சில இடங்களில் 'பேட்ச் ஒர்க்' மட்டுமே செய்யப்பட்டுள்ளன. சரி, நடுரோட்டில்தான் குழிகள் காணப்படுகின்றன என கருதி, ஓரமாக ஒதுங்கி செல்ல முயலும் இரு சக்கர வாகனங்களாலும் அவ்வாறு முடிவதில்லை. காரணம், சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்புகள். ஒட்டு போட்டு எந்த பயனும் இல்லை என மக்கள் வேதனை தெருவிக்கின்றனர்!!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments